சினிமா செய்திகள்

உணவு முறையை மாற்றி உடல் எடையை குறைக்க அனுஷ்கா யோசனை + "||" + Anushka's idea to change her diet and lose weight

உணவு முறையை மாற்றி உடல் எடையை குறைக்க அனுஷ்கா யோசனை

உணவு முறையை மாற்றி உடல் எடையை குறைக்க அனுஷ்கா யோசனை
உணவு முறையை மாற்றி உடல் எடையை குறைக்க அனுஷ்கா யோசனை.
நடிகைகளில் அனுஷ்கா முதல் வரிசை பட்டியலில் இருக்கிறார். யோகா ஆசிரியையான இவர் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒல்லியாக இருந்தார். ஆனால் சைஸ் ஜீரோ படத்திற்காக எடையை கூட்டிய பிறகு குறைக்க முடியாமல் அவதிப்பட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பழையபடி மாறியுள்ளார். எடையை குறைக்க தான் கடைபிடித்த முறைகள் என்ன என்பது குறித்து அவரே விவரித்தார். அனுஷ்கா கூறும்போது, “உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்து உடல் எடையை குறைக்கலாம். நான் ‌அப்படித்தான் குறைத்தேன். சருமம் ஹைட்ரேட் ஆகாமல் வைத்துக்கொள்ள குடிநீர் அதிகமாக குடிக்க வேண்டும். இடையிடையே இளநீர் குடிக்கலாம். இதனால் சருமம் பளபளப்பாக அழகாக காட்சியளிக்க உதவும். உணவில் பைபர் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உணவில் காய்கறிகளுக்கு முதலிடம் தரவேண்டும். இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இதனால் ஜீரண கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாது. மெட்டபாலிசம் சரியாக இருக்கும். இது எடையை குறைக்க உதவி செய்யும். எனது உணவில் சர்க்கரை, மைதா போன்றவற்றை சுத்தமாக சேர்க்க மாட்டேன். வீட்டில் நானே சொந்தமாக தயாரித்த உணவையே சாப்பிடுகிறேன். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அறவே சாப்பிட மாட்டேன் என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை கூறலாம்: நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு
24-ந்தேதி ஒலிபரப்பாகும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை கூறுவதற்கு, நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
2. மோசடிகளை தடுக்க இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்
வேலை வாங்கி தருவதாக கூறி நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும், வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை சமாளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.
3. அனுஷ்கா மறுபடியும் அகலமானார்
அனுஷ்கா, ஒரு படத்துக்காக ‘குண்டு’ பெண்ணாக மாறினார்.