சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..! + "||" + Hashtag trending on Twitter in support of actor Surya ..!

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
சென்னை,

டைரக்டர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. இந்தப் படத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து தொடர்ந்து சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு சூர்யா பதிலும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சூர்யாவுக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு படத்தயாரிப்பு நிறுவனம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு பதில் அளித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை தாக்கியதால் மறைந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து மாதந்தோறும் அவருக்கு வட்டி கிடைக்க வழி செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தார். 

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக டுவிட்டரில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ‘WeStandWithSuriya’என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்புணர்வை வீழ்த்த தேர்தலே சரியான தருணம்: ராகுல்காந்தி
வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு.
2. "இளமை இதோ இதோ..." - இணையத்தில் டிரெண்டாகும் இளையராஜாவின் வீடியோ
இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. நடிகை ராதிகாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!
நடிகை ராதிகா கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் மரத்தின் படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.
4. முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்
தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னர் ரோசய்யாவின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
5. இந்திராகாந்தி பிறந்த தினம்: பிரதமர் மோடி மரியாதை
இந்திராகாந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.