சினிமா செய்திகள்

சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் சிவா - 'அண்ணாத்த’ குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து + "||" + tears in my eyes when 'annatha' story was told- Says Rajinikanth

சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் சிவா - 'அண்ணாத்த’ குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து

சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் சிவா - 'அண்ணாத்த’ குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து
இயக்குநர் சிவா 'அண்ணாத்த' கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இயக்குநர் சிவா 'அண்ணாத்த' கதை சொல்லும்போதே என் கண்கள் கலங்கின என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஹூட் செயலியில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

விஸ்வாசம்’ போல் ஒரு கதை இருந்தால் கூறுங்கள் என இயக்குனர் சிவாவிடம் கூறினேன். அவரும் ’அண்ணாத்த’ கதையை கூறினார். எனக்கு மிகவும் பிடித்தது. அதை அப்படியே எடுக்க வேண்டும் என்றேன். ஆனால் அவர் அதை விட சிறப்பாக எடுத்துள்ளார் என்று கூறினார்

வில்லேஜ் கேரக்டர், நல்ல கதை, அது இரண்டும்  போதும் என்று சொன்னார் சிவா. ’அண்ணாத்த’ படத்தோட கதையை சொல்லச் சொல்ல கிளைமாக்ஸ் வரும் போது என் கண்ணை கலங்கிவிட்டது. அப்படியே அவருக்கு கைகொடுத்து இதே மாதிரி படம் எடுங்க என்று சொன்னேன்.

சார் இந்த படம் வந்ததும் உங்கள் ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லோரும் பார்ப்பார்கள் என்று சிவா  சொன்னார், அதே மாதிரியே சொல்லி அடித்திருக்கிறார்’ என்று ரஜினிகாந்த் அதில் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா.... ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா என்று நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. மாநாடு படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ரஜினிகாந்த்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் மாநாடு படக்குழுவுக்கு ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.
3. ரஜினிகாந்த் பாராட்டு மிகப்பெரிய விருது கிடைத்தது போல் உள்ளது - எஸ்.ஜே.சூர்யா
நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு தனக்கு மிகப்பெரிய கிடைத்தது போல் உள்ளது என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
4. இரண்டு ஓடிடி தளங்களில் வெளியான ‘அண்ணாத்த’..!
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படம் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது.
5. புதிய படத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த்
சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.