சினிமா செய்திகள்

போஸ்டர் கிளப்பிய சர்ச்சை: சந்தானத்தின் சபாபதி படத்திற்கு எதிர்ப்பு + "||" + Poster controversy: Opposition to Santhanam's Sabapathy film

போஸ்டர் கிளப்பிய சர்ச்சை: சந்தானத்தின் சபாபதி படத்திற்கு எதிர்ப்பு

போஸ்டர் கிளப்பிய சர்ச்சை: சந்தானத்தின் சபாபதி படத்திற்கு எதிர்ப்பு
சந்தானம் நடித்துள்ள 'சபாபதி' திரைப்படம் வருகிற நவம்பர் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது சந்தானத்தின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'சபாபதி'. அறிமுக டைரக்டர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டரில் ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று இடம்பெற்றிருந்ததால் அந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்படி செய்யாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு சபாபதி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படத்தின் போஸ்டர் வெளியீடு!
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படத்தின் போஸ்டரை குடியரசு தின விழாவையொட்டி நேற்று வெளியிடப்பட்டது.
2. கையில் பேனாவுடன் தனுஷ்... ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
3. வைரலாகும் விக்ரம் வேதா படத்தின் இந்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தின் வேதா கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
4. விஜய் சேதுபதி வெளியிட்ட சமுத்திரக்கனி படத்தின் போஸ்டர்
இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியின் ரைட்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருடைய அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
5. வாயில் சுருட்டுடன் அதர்வா... வைரலாகும் போஸ்டர்
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் அதர்வாவுடன் முன்னணி நடிகர்கள் இருவர் இணைகின்றனர்.