பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்..?


பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்..?
x
தினத்தந்தி 18 Nov 2021 3:27 AM GMT (Updated: 2021-11-18T08:57:58+05:30)

விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை,

விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

மகான் திரைப்படத்தில் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த 2 படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன. கோப்ரா பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. ஓரிரு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது.

இந்த படங்களுக்கு பிறகு விக்ரம் நடிக்கும் 62-வது படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் விக்ரம் நடிக்க உள்ள அடுத்த படத்தை பா.ரஞ்சித் டைரக்டு செய்ய இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பா.ரஞ்சித் ஏற்கனவே தினேஷ் நடிப்பில் அட்டக்கத்தி, கார்த்தி நடித்த மெட்ராஸ், ரஜினிகாந்தின் கபாலி, காலா, ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படங்களை இயக்கி உள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார். முதல் முறையாக விக்ரமுடன் இணைகிறார்.

Next Story