சினிமா செய்திகள்

பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது + "||" + Nayantara's new movie title and first look released on her birthday

பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின்  பர்ஸ்ட் லுக் வெளியானது
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்னை, 

படங்கள் இயக்குவது மட்டுமன்றி படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். அதனைத் தொடர்ந்து 'கூழாங்கல்', 'ராக்கி' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றினார்.

தற்போது விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நயன்தாரா நடித்து வருகிறார். 2015-ம் ஆண்டு வெளியான ‘மாயா’ படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேய் படமாக  உருவாகி வரும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கேர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்கிறார். பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இன்று (நவம்பர் 18) நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'கனெக்ட்' என பெயரிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
2. நயன்தாரா திரைப்படத்தில் நடிக்கும் பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக்..!
யூடியூப் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் ரித்விக் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
3. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
4. நயன்தாரா படத்தில் ‘லிப்ட்’ பட நாயகன்
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதுடன், வாங்கி திரையிட்டும் வருகிறார்கள்.
5. நயன்தாரா திருமண தேதி முடிவானது?
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலிக்கிறார்கள்.