‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு 7 வில்லன்கள்


‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு 7 வில்லன்கள்
x
தினத்தந்தி 18 Nov 2021 3:58 PM GMT (Updated: 18 Nov 2021 3:58 PM GMT)

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவருக்கு எதிராக 7 பேர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, நந்தினி, ஷிவானி, மகேஷ்வரி, நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

துப்பாக்கியுடன் இருக்கும் கமல்ஹாசன் தோற்றத்தை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். ஏற்கனவே விக்ரம் படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 4-ம் கட்டமாக இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

ஒரு மாதம் இந்த படப்பிடிப்பு நடக்கும் என்றும், அதோடு மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். விக்ரம் படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவருக்கு எதிராக 7 பேர் வில்லன்களாக நடிக்கின்றனர். விஜய்சேதுபதி, பகத் பாசில் இருவரும் அண்ணன் தம்பியாக நடிக்கிறார்கள் என்றும் இவர்கள்தான் படத்தில் முக்கிய வில்லன்கள் என்றும் கூறப்படுகிறது. சம்பத்ராம், செம்பன் வினோத் ஜோஸ் ஆகியோரும் வில்லன்களாக வருகிறார்கள். விக்ரம் படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.


Next Story