மாநில செய்திகள்

நடிகர் சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைத்தால் நான் காசு தருகிறேன்- சீமான் + "||" + I will give money if the actor kicks the person who told him to kick Surya - Seeman

நடிகர் சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைத்தால் நான் காசு தருகிறேன்- சீமான்

நடிகர் சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைத்தால் நான் காசு தருகிறேன்- சீமான்
சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணத்தான் நினைப்பார்கள், புதிதாக ஒரு பிரச்னையை உருவாக்க நினைக்க மாட்டார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85-ம் ஆண்டு  நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  

இந்த சந்திப்பின் போது ஜெய் பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.  

அதற்கு பதில் அளித்து பேசிய சீமான் கூறியதாவது :

அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும். நான் படத்தை பார்த்தபோது எனக்கு அதுபோன்று எதுவும் தெரியவில்லை. கதையும், கதாப்பாத்திரத்திலும் என் கவனம் இருந்தது.  மற்றவர்கள் இதுகுறித்து பேசியபோது எனக்கு தெரிந்தது. 

உண்மை சம்பவத்தில் தொடர்புடைய அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும் ?. அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும். அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நான் கவனித்திருந்தால் முன்பே தம்பி சூர்யாவிடம் அதனை நீக்க சொல்லியிருப்பேன்’ என்றார்.

மேலும், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவோம் என பா.ம.க நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். அதுகுறித்து பாமக கட்சி தலைமை எதுவும் கூறவில்லை  என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், “ இது அநாகரீகமான பதிவு. எனக்கு தெரிந்தவரை சூர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது. அவர் கதை கேட்டிருப்பார். நடித்திருப்பார்.

 பின்புலத்தில் என்ன இருக்கிறது என்பது கலை இயக்குநர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் தான் பார்ப்பார்கள். சூர்யா இது தெரிந்து செய்திருப்பாரா என்ன ? . சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணத்தான் நினைப்பார்கள். புதிதாக ஒரு பிரச்சினையை உருவாக்க நினைக்க மாட்டார்கள்.

சூர்யா திட்டமிட்டு எதையும் செய்திருக்க மாட்டார். தம்பி சூர்யாவை மிதியுங்கள் ...உதையுங்கள் என்பது எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. அப்படி பதிவு செய்தவரை வேண்டுமானால் உதையுங்கள் நான் வேண்டுமானால் காசு தருகிறேன்.” என சீமான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கிறார் சூர்யா..!
நடிகர் சூர்யா மீண்டும் கேங்ஸ்டர் கதபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
2. உள்ளம் உருகுதய்யா... சூர்யா படத்தின் அடுத்த பாடல்
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
3. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது....!
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்
4. தனது மூச்சுக்காற்றை செலுத்தி குரங்கை காப்பாற்றிய நபருக்கு நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் பாராட்டு
நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அந்த வீடியோவை பகிர்ந்து பிரபு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
5. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது... சூர்யா
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு சர்ச்சைகளும், ஆதரவுகளும் எழுந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.