சினிமா செய்திகள்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு + "||" + Surya's Etharkkum Thunindhavan Release Date Announcement

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். டி. இமான் இசையமைத்துள்ளார். பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர்.

கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் குறையத் தொடங்கிய பிறகு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உன்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை சன்பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கிறார் சூர்யா..!
நடிகர் சூர்யா மீண்டும் கேங்ஸ்டர் கதபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
2. உள்ளம் உருகுதய்யா... சூர்யா படத்தின் அடுத்த பாடல்
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
3. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது....!
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்
4. தனது மூச்சுக்காற்றை செலுத்தி குரங்கை காப்பாற்றிய நபருக்கு நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் பாராட்டு
நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அந்த வீடியோவை பகிர்ந்து பிரபு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
5. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது... சூர்யா
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு சர்ச்சைகளும், ஆதரவுகளும் எழுந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.