இசை சரியில்லை என இசையமைப்பாளரை அவமதித்த பிரபல ஹீரோ


இசை சரியில்லை என இசையமைப்பாளரை அவமதித்த பிரபல ஹீரோ
x

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்தவர். தமன் பின்னர் அவர் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக மாறினார்.

ஐதராபாத் 

தெலுங்கு சினிமாவில் தமன் இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறக்கிறார். தமன் சினிமாவில் நடிகராகவே அறிமுகமானார். அதுவும் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடிததார்

சமீபத்தில் தெலுங்கில் வெளியான பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். அதன் பின்னணி இசைக்காக பவன் கல்யாண் ரசிகர்கள் தமனை கொண்டாடினர். தற்போது தயாராகிவரும் பவன் கல்யாணின் பீம்ல நாயக், பாலகிருஷ்ணாவின் அகண்டா, மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா என அனைத்துக்கும் தமனே இசை அமைக்கிறார்.

இந்த வருடம் செப்டம்பர் 10 வெளியான நானியின் தக் ஜெகதீஷ் படத்துக்கும் தமன் இசையமைத்தார். இரண்டு பாடல்களுக்கு அவர் இசையமைத்த நிலையில் படத்திலிருந்து விலகினார். மீதிப் பாடல்களும், பின்னணி இசையும் அமைத்தவர் இசையமைப்பாளர் கோபி சுந்தர். தமன் ஏன் விலகினார் என்பதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. தற்போது அவரே அதனை வெளியிட்டுள்ளார்.

இரண்டு பாடல்களை முடித்த நான். பின்னணி இசையையும் முழுமையாக முடித்துக் கொடுத்தேன். ஆனால், படத்தின் நாயகன் நானிக்கு பின்னணி இசை பிடிக்கவில்லை. அதனால், படத்திலிருந்து வெளியேறினேன். எல்லாப் படங்களையும் போலதான் அந்தப் படத்துக்கும் முழு ஈடுபாட்டுடன் இசையமைத்தேன். எந்த இடத்தில் இசை அவர்களுக்குப் பிடிக்காமல் போனது தெரியவில்லை" என  தமன்  கூறியுள்ளார்.

இசை பிடிக்கவில்லை என இசையமைப்பாளரை மாற்றுவது சினிமாவில் புதிதல்ல. 

ஆனால், தக் ஜெகதீஷில் இசை பிடிக்கவில்லை என்று நானி கருதியதால் தமன் வெளியேறியிருக்கிறார். பவன் கல்யாண், மகேஷ்பாபு, பாலகிருஷ்ணா, இப்போது ஷங்கர் படம் என முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் படங்களுக்கு இசையமைத்துவரும் தமனின் இசையில் நானிக்கு திருப்தியில்லை என்பது தெலுங்கு சினிமாவில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Next Story