3 கதாநாயகிகள் இணைந்து நடித்த பேய் படம்


3 கதாநாயகிகள் இணைந்து நடித்த பேய் படம்
x
தினத்தந்தி 19 Nov 2021 10:04 AM GMT (Updated: 19 Nov 2021 10:04 AM GMT)

முன்னாள் கதாநாயகிகளான சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா ஆகிய மூன்று பேர்களும் ஒரு பேய் படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

‘கிராண்மா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில், பிரபல மலையாள நடிகர் ஹேமந்த் மேனன் வில்லனாக நடித்து இருக்கிறார்.

சண்டை காட்சிகளில் சோனியா அகர்வால், ‘டூப்’ இல்லாமல் நடித்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார். நகைச்சுவை இல்லாத பேய் படம், இது. சிஜின்லால் எஸ்.எஸ். டைரக்டு செய்ய, ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

கேரளாவின் மலைப்பகுதிகளில் படம் வளர்ந்து இருக்கிறது.

Next Story