சினிமா செய்திகள்

பிரபல நடிகரின் மகன் ஓட்டலில் சிறை வைப்பு + "||" + film crew including hero was detained at the hotel

பிரபல நடிகரின் மகன் ஓட்டலில் சிறை வைப்பு

பிரபல நடிகரின் மகன் ஓட்டலில் சிறை  வைப்பு
மூணாறில் பிரபல நடிகர் ஒருவரின் மகன் ஓட்டலில் சிறை வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகர் ஜெயராம். பல தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம். தற்போது ஏராளமான வெப்தொடர்களில் நடித்து வருகிறார். அதன் பின்னர் அவர் நடித்த ஒரு பக்க கதை என்ற படமும் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராம் புதிய  தமிழ் வெப்தொடரில் நடித்து வருகிறார். இதற்காக மூணாறு சென்றார். அங்கு ஒரு சொகுசு விடுதியில் படக்குழுவினருடன் தங்கி இருந்தார்.

தயாரிப்பு நிறுவனம் தங்கியிருந்த அறை உணவகக் கட்டணத்தை செலுத்த வில்லை . இதற்கிடையே அறை வாடகை, ஓட்டல் கட்டணம் என்று சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. இந்த பணத்தை கொடுக்காமல் படக்குழுவினர் அறையை காலி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஓட்டல் ஊழியர்கள் அவர்களை வெளியே விடாமல் காளிதாஸ் ஜெயராம் உள்பட படக்குழுவினரை சிறைபிடித்தனர். 

பின்னர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பில் கட்டணத்தை செலுத்துவதாக கூறி முழு தொகையையும் செலுத்தினர். அதன் பின்னரே ஊழியர்கள் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 18 வருட திருமண வாழ்க்கை பிரிவு ஏன்...? ஒற்றுமையாக பதிவிட்ட ஐஸ்வர்யா - தனுஷ்...!
நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
2. ஜெயலலிதா வேடத்தில் ஐஸ்வர்யா ராய் ; இருவர் படம் வெளியாகி 25 ஆண்டு நிறைவு
இருவர் படம் இன்றும் ஜனவரி 14 அன்று தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்தப் படம் ஐஸ்வர்யாவின் சினிமா தொழில் வாழ்கைக்கு வழி வகுத்தது.
3. ஷங்கரின் மகளை பாராட்டிய ரோபோ சங்கரின் மகள்..! " வாழ்த்துகள் அக்கா... லவ் யூ ஸோ மச் தேனு..."
டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் முத்தையாவின் விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.
4. சமந்தாவை பிரியும் முடிவு ...! இருவரின் நலன் கருதியே...!- நாக சைதன்யா
சமந்தாவை பிரியும் முடிவு பரஸ்பர நலன் கருதியே எடுக்கப்பட்ட முடிவு என நடிகர் நாக சைதன்யா கூறினார்
5. தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் - நடிகை ஆஷா சரத்
தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது என நடிகை ஆஷா சரத் கூறினார்.