சினிமா செய்திகள்

காதி உடையில் கமல்ஹாசன் + "||" + Kamal Haasan in khadi dress

காதி உடையில் கமல்ஹாசன்

காதி உடையில் கமல்ஹாசன்
கதர் ஆடைகளை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் கமல்ஹாசன். இதற்காக அவர் காதி உடையில் நடந்து வருவது போன்ற ‘டீஸர்’ வெளியிடப்பட்டது.
தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தாண்டி, ‘சகலகலா வல்லவன்’ என்று பெருமையுடன் அழைக்கப்படுபவர் கமல்ஹாசன் ஒருவர்தான். மற்ற நடிகர்கள் ஏற்க தயங்கும் வேடங்களை ஏற்று நடிப்புலகில் சாதனை புரிந்து வருபவர் இவர்தான்.

இந்திய சினிமாவே பார்த்திராத புதிய தொழில்நுட்பங்களை தன் படங்களில் புகுத்தி, ‘உலக நாயகன்’ ஆக சரித்திரம் படைத்து வருகிறார். ஐந்து வயதில் தொடங்கி, அறுபது வருடங்களுக்கும் மேலாக சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார்.

இப்போது ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடங்கி, அரசியல் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த முயற்சியாக கதர் ஆடைகளை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் காதி உடையில் நடந்து வருவது போன்ற ‘டீஸர்’ வெளியிடப்பட்டது. இதிலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.