சினிமா செய்திகள்

‘‘நான் தயார்... நீங்க தயாரா?’’ அஜித்குமார் + "||" + I am ready ... are you ready? Ajithkumar

‘‘நான் தயார்... நீங்க தயாரா?’’ அஜித்குமார்

‘‘நான் தயார்... நீங்க தயாரா?’’ அஜித்குமார்
அஜித்குமாரும், டைரக்டர் சிவாவும் ஏற்கனவே வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளனர். படத்துக்கு ‘வரம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ரஜினிகாந்த் நடித்து சிவா இயக்கத்தில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த ‘அண்ணாத்த’ படம் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து டைரக்டர் சிவா, சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

சூர்யா ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த ‘வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டு வருவதாக சிவாவிடம் கூறியிருக்கிறாராம். ‘வாடிவாசல்’ படம் முடிவதற்கு ஒரு வருடம் ஆகுமே...அதுவரை என்ன செய்யலாம்? என்று சிவா யோசித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு அஜித்குமார் போன் செய்தாராம்.

‘‘மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரு படம் செய்யலாம்’’ என்று சிவாவிடம் அஜித் கூறியதாக தெரிகிறது. ‘‘நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா?’’ என்று அவர் கேட்டு இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. டைரக்டர் சிவாவின் வீட்டிற்கு திடீர் வருகை தந்த ரஜினிகாந்த்..!
டைரக்டர் சிவாவின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.