சினிமா செய்திகள்

விஜய்யின் ‘பீஸ்ட்’டுடன் மோதும் 3 பெரிய படங்கள் + "||" + 3 big pictures colliding with Vijay’s ‘Beast’

விஜய்யின் ‘பீஸ்ட்’டுடன் மோதும் 3 பெரிய படங்கள்

விஜய்யின் ‘பீஸ்ட்’டுடன் மோதும் 3 பெரிய படங்கள்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே வருகிறார். செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஜய்க்கு ராணுவ அதிகாரி கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டையொட்டி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படம் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் அதே நாளில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ள சலார், யாஷ் நடித்துள்ள கே.ஜி.எப். 2, அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சட்டா இந்தி படம் ஆகிய 3 பெரிய படங்கள் திரைக்கு வர உள்ளன. சலார், கே.ஜி.எப்.2 படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

பீஸ்ட் படத்துக்கு தமிழகத்தில் அதிக தியேட்டர்கள் கிடைத்தாலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் சலார், கே.ஜி.எப். 2, லால்சிங் சட்டா படங்களினால் கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பீஸ்ட் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? ரிலீஸ் தள்ளிப்போகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.