சினிமா செய்திகள்

தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்: பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு + "||" + Priyanka Chopra's First Look From Matrix 4 - But Fans Just Want To Know About Missing Surname

தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்: பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்: பிரியங்கா சோப்ராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
'தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்’ படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுகத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி

1999ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘தி மேட்ரிக்ஸ்'. கேயானு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

முதல் பாகத்தை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு 'தி மேட்ரிக்ஸ் ரீலோடட்' என்ற 2ம் பாகமும், அதே ஆண்டின் இறுதியில் 'தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்' என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன. இப்படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், வில்லேஜ் ரோட் ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்தன.

ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு 'தி மேட்ரிக்ஸ்' படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு 'தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கேயானு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் குறித்துப் படக்குழு எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுகத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. காணாமல் போன பிரபல நடிகை சாக்குமூட்டையில் பிணமாக மீட்பு
வங்காள தேசத்தில் காணாமல் போன பிரபல நடிகை சாக்குமூட்டையில் பிணமாக மீட்கப்பட்டார்.
2. ஆணுறை விளம்பரம் முதல்...! ஆபாச நடனம் வரை...! சர்ச்சையும்...! சன்னிலியோனும்...!
சன்னி லியோன் என்றாலே சர்ச்சை தான் அவர் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை.
3. பிரியங்கா சோப்ராவின் காலணிக்கு தனி அறை
விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்து ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறி உள்ளார்.
4. நான் ஒரு போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன் : நடிகர் சிவகார்த்திகேயன்
சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட சென்றிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
5. பிரபல நடிகைக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
பிரபல நடிகைக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.