சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்பு: கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து + "||" + Poet Vairamuthu inquires about Kamal Haasan health

கொரோனா பாதிப்பு: கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து

கொரோனா பாதிப்பு: கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனிடம் நலம் விசாரித்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் கமல்ஹாசன், அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனிடம் நலம் விசாரித்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும், அவர் விரைவில் குணம் பெற வாழ்த்தியதாகவும் கூறியுள்ளார். கட்டுறுதி மிக்க உடல் வலிமையும், கல்லுறுதி மிக்க மன வலிமையும் கமல்ஹாசன் கொண்டுள்ளதாகவும், விரைவில் நலம் பெற்றும் அவர் வீடு திரும்புவார் என்றும் வைரமுத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா: நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்தது
தமிழகத்தில் 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துள்ளது.
2. கொரோனா பரவலால் கர்நாடகத்தில் பொருளாதாரம் பாதிப்பு - பசவராஜ் பொம்மை கவலை
கர்நாடகத்தில் கொரோனா பரவலால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
3. மேலும் 400 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இரு கட்டமாக நடத்த திட்டம்
முதற்கட்டமாக லீக் ஆட்டங்களை அடுத்த மாதம் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
5. மேலும் 489 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.