தனுஷின் பாலிவுட் திரைப்படம்: வெளியானது டிரைலர்...!


தனுஷின் பாலிவுட் திரைப்படம்: வெளியானது டிரைலர்...!
x
தினத்தந்தி 24 Nov 2021 11:47 AM GMT (Updated: 2021-11-24T17:17:49+05:30)

படத்தின் டிரைலரில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

மும்பை 

நடிகர் தனுஷ் , பாலிவுட் நடிகர் அக்சய் குமார் , நடிகை சாரா அலி கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் " அட்ராங்கி ரே ".ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ள இந்த திரைப்படம் காதல் மற்றும் இசை கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. டி-சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆப் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நடிகர் தனுஷ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தின்  டிரைலர்  இன்று மதியம் வெளியானது. 3 நிமிடம் 8 வினாடிகள் ஓடும் இந்த டிரைலரில் முதல் பாதியில் நடிகை சாரா  அலி கான் மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையிலான காதல் கதை இடம்பெற்றுள்ளது. டிரைலரின் கடைசி பாதியில் அக்சய் குமார் மற்றும் சாரா  அலி கான்  இடையிலான காதல் கதை இடம்பெற்றுள்ளது.

தனுஷ் மற்றும் அக்சய் குமார் என இருவரையும் காதலிக்கும் கதாபாத்திரமாக நடிகை சாரா  அலி கான் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் படத்தின் டிரைலரில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த திரைப்படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story