சினிமா செய்திகள்

நாளை வெளியாகிறது மாநாடு திரைப்படம்..!! + "||" + Manadu movie to be released tomorrow

நாளை வெளியாகிறது மாநாடு திரைப்படம்..!!

நாளை வெளியாகிறது மாநாடு திரைப்படம்..!!
நாளை திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் வெளியாகும் என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை,

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ’மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 

திடீரென இன்று மாலையில் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் 'நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.  வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்' என மாநாடு ரிலீஸ் தள்ளிப்போவதாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் நாளை படம் திட்டமிட்டபடி ரிலீசாகும் என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'உங்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. மாநாடு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும்' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் 'கடவுள் இருக்கார் ' என்றும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் படத்தின் ரிலீஸை உறுதி செய்யும் வகையில் இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சிம்புவின் 'மாநாடு' பட ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு
நாளை வெளியாக இருந்த நடிகர் சிம்புவின் 'மாநாடு' பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
2. எஸ்.ஜே.சூர்யா மகிழ்ச்சி
இயக்குனராகவும், கதாநாயகனாகவும் ரசிகர்களை கவர்ந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது மற்ற நடிகர்கள் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
3. தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது மாநாடு
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4. 'மாநாடு' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.