சினிமா செய்திகள்

நடிகர் தனுசின் “கலாட்டா கல்யாணம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..! + "||" + Dhanush's Galata Kalyanam Trailer Released

நடிகர் தனுசின் “கலாட்டா கல்யாணம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் தனுசின் “கலாட்டா கல்யாணம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகர் தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள கலாட்டா கல்யாணம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
டைரக்டர் ஆனந்த்.எல். ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் நடிகர் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். 

அதற்கு அடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக நடித்து அசத்தினார். 

தற்போது, மீண்டும் ஆனந்த்.எல். ராய் இயக்கத்தில் 'அத்ரங்கி ரே' படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார். 

இந்த படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது. வருகிற டிசம்பர் மாதம் 24-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாகிறது.

இந்த நிலையில் 'கலாட்டா கல்யாணம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினி நடித்த 'அண்ணாத்த' படத்தின் டிரைலர் வெளியானது...
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
2. தேசிய திரைப்பட விருது பெற்ற தனுஷ், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன்!
67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் தனுஷ், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன், பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
3. எனிமி படத்தின் டிரைலர் வெளியானது
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டிரைலர் வெளியானது.
4. சூர்யாவின் 'ஜெய்பீம்' டிரைலர் வெளியானது
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார்.
5. சுருட்டு பிடிக்கும் காட்சி சர்ச்சையில் நடிகர் தனுஷ்
தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் ஓ.டி.டியில் வெளியானது.