சினிமா செய்திகள்

திரையரங்குகளில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியானது - சிம்பு ரசிகர்கள் உற்சாகம் + "||" + Maanadu Movie released in theaters Simbu fans excited

திரையரங்குகளில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியானது - சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

திரையரங்குகளில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியானது - சிம்பு ரசிகர்கள் உற்சாகம்
தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
சென்னை,

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி(இன்று) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 

இதற்கிடையில் திடீரென நேற்று மாலையில் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் ‘மாநாடு’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாகவும், வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “உங்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. மாநாடு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும்” என அறிவித்தார்.

இதையடுத்து நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் ‘மாநாடு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே காத்திருந்தனர். இந்த நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் காலை 5 மணிக்கு வெளியாகும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதாக திரையரங்குகளின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இதனால் திரையரங்குகளில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், காலை 6.45 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்களின் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் ‘மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த மாநாடு தயாரிப்பாளர்
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்... என்னை நீங்க பார்த்துக்கோங்க... கண்கலங்கிய சிம்பு
மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, ரசிகர்களிடம் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
3. அரசு அதிகாரிக்கு மலர் அபிஷேகம்-வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது
அலுவலகத்தில் அரசு அதிகாரிக்கு மலர் அபிஷேகம் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
4. ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
5. காந்தி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் சிம்பு
பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சிலம்பரசன், காந்தி ஜெயந்தி தினத்தில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்.