சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி + "||" + Ajith's strength release date

அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி

அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி
அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார்.
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படம் பற்றிய தகவல்களை வெளியிட கேட்டு பிரதமர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களிடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்ததும், அவர்களுக்கு அஜித் அறிவுரை சொல்லி கட்டுப்படுத்தியதும் பரபரப்பானது.

வலிமை தீபாவளி பண்டிகையில் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்த்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனாலும் தேதியை வெளியிடவில்லை.

இந்த நிலையில் வலிமை படத்தை பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாகவே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் என்றும், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்புகின்றனர். வலிமை படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். கியூமா குரோஷி நாயகியாக நடித்துள்ளார்.