சினிமா செய்திகள்

வில்லனாக விக்ரம்? + "||" + Villainaka Vikram?

வில்லனாக விக்ரம்?

வில்லனாக விக்ரம்?
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் தயாராக உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கதாநாயகர்கள் வில்லனாக நடிக்க வருகிறார்கள். ஏற்கனவே விஜய்சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். முன்னாள் கதாநாயகர்கள் கார்த்திக் அனேகன் படத்திலும், அர்ஜுன் கடல், இரும்புத்திரை ஆகிய படங்களிலும் வில்லன்களாக நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவும் வில்லனாக நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் தயாராக உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடிக்க விக்ரம் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் கருதுகின்றனர்.

இது குறித்து விக்ரமிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா? என்பது உறுதியாகவில்லை. எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது ரூ.450 கோடி செலவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், அஜய்தேவ்கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரியில் திரைக்கு வருகிறது.