சினிமா செய்திகள்

விக்ரம்-2 படத்தை வாங்குவதற்கு கடுமையான போட்டி + "||" + Tough competition to buy Vikram-2 movie

விக்ரம்-2 படத்தை வாங்குவதற்கு கடுமையான போட்டி

விக்ரம்-2 படத்தை வாங்குவதற்கு கடுமையான போட்டி
கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்-2’ படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, பஹத்பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராமன், ஷிவானி, காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார்.
படப்பிடிப்பில் இருக்கும்போதே இந்தப் படத்தை வாங்குவதற்கு கடுமையான போட்டி உருவாகி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் பேசப் படுகிறது. 

இந்தி மொழிமாற்ற உரிமை மட்டும் ரூ.35 கோடிக்கு கேட்கப்படுவதாகவும், தயாரிப்பாளர் தரப்பில் ரூ.50 கோடி சொல்லப்படுவதாகவும் கூறுகிறார்கள்.