சினிமா செய்திகள்

துணிச்சல் தான்...!ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா + "||" + It's courage ...! Samantha in a controversial role in a Hollywood movie

துணிச்சல் தான்...!ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா

துணிச்சல் தான்...!ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா
நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது சினிமா செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னை

நடிகை சமந்தா தனது முதல் ஹாலிவுட் படமான அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ் படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதில் யாரும் எதிர்பாராத மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது சினிமா செல்வாக்கு  நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

தமிழ், தெலுங்கில் தயாராகும் இரு நாயகி மையப் படங்களில் அவர் நடிக்கிறார். இந்தி திரைப்படம், வெப் தொடர்களிலும் நடிக்க இருக்கிறார். அத்துடன் ஆங்கிலப் படம் ஒன்றிலும் நடிக்கிறார். பிரபல இயக்குனர் பிலிப் ஜான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ், என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், இந்திய எழுத்தாளர் டைமெரி என் முராரி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட உள்ளது. ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்தும், இருபால் தமிழ் பெண்ணாக சமந்தா மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்து நடிகை சமந்தா தன்னுடைய டுவிட்டரில் "ஒரு புதிய உலகம். அன்பின் ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இருப்பதில் முற்றிலும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை அனுவாகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி பிலிப்ஜான். இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது.. நன்றி என கூறியுள்ளார்.

பிலிப் ஜானுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் சமந்தா, கடைசியாக 2009 இல் 'இ மாய சேஷவ்' படத்துக்காக ஆடிசனில் கலந்து கொண்டதாகவும், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பதற்றத்தை ஆடிசனின் போது அனுபவப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பெப்டா விருது பெற்றுள்ள பிலிப் ஜான் வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர். உலக அளவில் பிரபலமான டவுன்டன் அபே (Downton Abbey) தொலைக்காட்சி தொடரை இயக்கியவரும் இவரே.தொடர்புடைய செய்திகள்

1. இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை மீரா ஜாஸ்மின்
இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் புதிய கணக்கை மீரா ஜாஸ்மின் தொடங்கி தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்
2. ஒரு முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் வாங்கிய நடிகை
அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.
3. தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி பிரிவு : உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து சமரச முயற்சி
தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரம் நேற்றும், இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
4. நடிகர்களின் விவாகரத்துகள் "நல்ல டிரெண்ட் செட்டர்கள்"- ராம் கோபால் வர்மா சர்ச்சை டுவிட்
நடிகர்களின் விவாகரத்துகள் "நல்ல டிரெண்ட் செட்டர்கள்"-என டைரக்டர் ராம் கோபால் வர்மா சர்ச்சை டுவிட் வெளியிட்டு உள்ளார்.
5. ஓட்டல் அறைக்கு தனியாக வரச் சொன்னார்கள்...! நடிகை அப்சரா ராணிக்கு ஏற்பட்ட அனுபவம்...!
சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை அப்சரா ராணி பகிர்ந்துள்ளார்.