சினிமா செய்திகள்

மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து...!! + "||" + Actor Rajinikanth congratulates the Maanadu crew ... !!

மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து...!!

மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து...!!
மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 

படம் பார்த்த ரசிகர்கள் சிம்புவிக்கு இது தரமான கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், மாநாடு படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்துள்ள மாநாடு படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, தனது டுவிட்டரில், “மாநாடு படம் பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படக்குழுவுக்கு தலைவர் (ரஜினிகாந்த்) வாழ்த்து தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்.
2. உலக தலைமை ஏற்கும் நாடாக பாரதத்தை உருவாக்க வேண்டும் கவர்னர் குடியரசு தின வாழ்த்து செய்தி
சுதந்திர நூற்றாண்டு விழாவை கொண்டாடும்போது, உலக தலைமை ஏற்கும் நாடாக பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று தனது குடியரசு தின வாழ்த்து செய்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
3. ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்... ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
4. ‘‘மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி’’ மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
‘‘மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி’’, என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.