தேசிய செய்திகள்

இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உ.பி தேர்வு + "||" + Uttar Pradesh chosen as most friendly state for film shooting

இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உ.பி தேர்வு

இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உ.பி தேர்வு
இந்தியாவில் சினிமா படப்படிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
லக்னோ,

இந்தியாவின் 52வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம்.  இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்படும்.

இந்த திருவிழாவில், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் உள்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்படும்.  சிறந்த திரைப்படம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படும்.

இந்நிலையில், இந்தியாவின் 52வது சர்வதேச திரைப்பட திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவில் சினிமா படப்படிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான விருதை உத்தரபிரதேச அரசுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் வழங்கினார். அந்த விருதை உத்தரபிரதேச கூடுதல் தலைமை செயலாளர் மாநில அரசு சார்பில் பெற்றுக்கொண்டார்.  

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன - அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
2. நடத்தையில் சந்தேகம்: 2-வது மனைவியை கொலை செய்த கொலை குற்றவாளி
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை குற்றவாளி தனது 2-வது மனைவியை கொலை செய்துள்ளார்.
3. உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 125 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பிரியங்கா காந்தி..!
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்காக 125 காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பிரியங்கா வெளியிட்டார்.
4. 3-வது நாளாக உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார். புதிதாக ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ., கட்சியை விட்டு விலகினார்.
5. உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார்.