சினிமா செய்திகள்

மாநாடு: நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாது - சிலம்பரசன் நெகிழ்ச்சி + "||" + The single word of thanks cannot be suppressed Silambarasan

மாநாடு: நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாது - சிலம்பரசன் நெகிழ்ச்சி

மாநாடு: நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாது - சிலம்பரசன் நெகிழ்ச்சி
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது என நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார்.
சென்னை,

நடிகர் சிலம்பரசன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. 

ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளை தரையில் விழவிடாமல் தாங்கி கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன்.

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கி விட முடியாது. ஆனால் பதிலுக்குத்தெரிவிக்க வேறு வார்தைகள் இல்லையே

மாநாடு படத்திற்கு வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித்தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து இயக்குர் வெங்கட்பிரபு டுவிட்டர் பதிவில், 

நான்கே நாட்களில் விநியோகஸ்தர்களுக்கு லாபம் ஈட்டிக்கொடுத்துள்ளது மாநாடு படம். கேரளா மற்றும் கர்நாடகாவிலும் மூன்றே நாட்களில் லாபம் ஈட்டியுள்ளது என பதிவிட்டுள்ளார்.