சினிமா செய்திகள்

‘83’ படத்தின் டிரைலர் வெளியானது: டிரெண்டிங் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள் + "||" + ‘83’ Movie Trailer Released: Trending Cricket Fans

‘83’ படத்தின் டிரைலர் வெளியானது: டிரெண்டிங் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்

‘83’ படத்தின் டிரைலர் வெளியானது: டிரெண்டிங் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்
இந்திய அணி முதல்முறையாக வெற்றி பெற்றதை மையப்படுத்தி வெளியாகவுள்ள ‘83’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.
புதுடெல்லி, 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய அணிக்கு வரலாற்றில் முக்கியமான நாளாகும். உலக்கோப்பை போட்டிகளில் அரையிறுதி கூட நெருங்காத இந்தியா முதன்முறையாக அன்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.  

பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்நிலையில் அதனை கண்முன்னே கொண்டு வரும் ஒரு கலைப்படைப்பாக தான் ‘83’ என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. 

இயக்குநர் கபீர்கான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள்போல் நடித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக வைத்து கதை கரு உருவாக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 83 திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.  கிரிக்கெட் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
2. 'தி பேட்மேன்' டிரைலர் சாதனை
சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான பேட்மேன் படவரிசையில் மற்றுமொரு படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.