ஜி.வி.பிரகாஷ் படம் தடை நீங்கியது?


ஜி.வி.பிரகாஷ் படம் தடை நீங்கியது?
x
தினத்தந்தி 30 Nov 2021 9:01 AM GMT (Updated: 2021-11-30T14:31:22+05:30)

ஜெயில் படம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் படத்துக்கு தடை விதிக்கும்படி விவகாரம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு ஜெயில் படம் தடை நீங்கியது.

வெயில், அங்காடி தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான வசந்த பாலன் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ஜெயில் படத்தை டைரக்டு செய்து முடித்துள்ளார். ஜெயில் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் படத்துக்கு தடை விதிக்கும்படி விவகாரம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து பதில் அளிக்குமாறு ‘ஜெயில்' படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜெயில் படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்ற கேள்விக்குறி எழுந்தது. 

இந்த நிலையில் இயக்குனர் வசந்தபாலன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜெயில்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது என்று தகவல் வெளியானதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல பிரபல நண்பர்கள் என்னிடம் இந்த ‘ஜெயில்’ படத்துக்கு எத்தனை பிரச்சினைதான் வரும் என்று தங்களின் வருத்தங்களைத் தெரிவித்தார்கள். விரைவில் தீர்வு காணப்படவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டது. ஆகவே தடைகள் முழுமையாக நீங்கி திரையரங்குகளில் ‘ஜெயில்’ வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


Next Story