இன்று இரவு வெளியாகும் ‘வலிமை’ படத்தின் 2வது பாடல்..?


இன்று இரவு வெளியாகும் ‘வலிமை’ படத்தின் 2வது பாடல்..?
x
தினத்தந்தி 1 Dec 2021 1:08 PM IST (Updated: 1 Dec 2021 1:08 PM IST)
t-max-icont-min-icon

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் 2வது பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, 

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. வலிமை தீபாவளி பண்டிகையில் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்த்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனாலும் தேதியை வெளியிடவில்லை.

இந்த நிலையில் வலிமை படத்தை பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாகவே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் என்றும், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியானது. இந்த மாதம் படம் தணிக்கை செய்யப்பட உள்ளது. வலிமை படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். கியூமா குரோஷி நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின்  ' நாங்க வேற மாறி' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்த பாடல்  யூடியூப் இணையதளத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனையடுத்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இந்நிலையில் வலிமை படத்தின் 2வது பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Next Story