சிவகார்த்திகேயன் நடிக்கும் 5 படங்கள்


சிவகார்த்திகேயன் நடிக்கும் 5 படங்கள்
x
தினத்தந்தி 4 Dec 2021 9:55 PM IST (Updated: 4 Dec 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றது. சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’, ரவிக்குமார் இயக்கும் அயலான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

டான் படத்தை காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். தற்போது அசோக் இயக்கும் ‘சிங்கப்பாதை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அடுத்து அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ரிதுவர்மாவிடம் பேசி வருகிறார்கள். 

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரிதுவர்மா ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் முண்டாசுபட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் தனுசை இயக்க ஒரு கதை சொன்னதாகவும் அந்த கதை தனுசுக்கு பிடிக்கவில்லை என்றும், ஆனால் சிவகார்த்திகேயன் அந்த கதையை கேட்டு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Next Story