சினிமா செய்திகள்

ரஜினியின் புது பட இயக்குனர் யார்? + "||" + Who is Rajinikanth's new film director?

ரஜினியின் புது பட இயக்குனர் யார்?

ரஜினியின் புது பட இயக்குனர் யார்?
இயக்குனர்களில் ரஜினி படத்தை இயக்குவது யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ரஜினியின் புது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரஜினிகாந்த் சில இயக்குனர்களை அழைத்து கதை கேட்டு இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. தற்போதையை நிலையில் 5 இயக்குனர்கள் போட்டியில் உள்ளனர். 

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினி பார்த்து அந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை ஏற்கனவே அழைத்து பாராட்டியதோடு தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படி கூறியிருந்தார். எனவே அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் பெயர்களும் அடிப்பட்டன. 

தற்போது கே.எஸ்.ரவிக்குமார், பாண்டிராஜ் ஆகியோரில் ஒருவர் டைரக்டு செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த இயக்குனர்களில் ரஜினி படத்தை இயக்குவது யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கனவே ரஜினியை வைத்து முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.