சமுத்திரக்கனி நடித்துள்ள 'ரைட்டர்' படத்தின் டீசர் வெளியானது


சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் டீசர் வெளியானது
x
தினத்தந்தி 6 Dec 2021 4:28 PM GMT (Updated: 2021-12-06T21:58:51+05:30)

பா. ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சென்னை,

டைரக்டர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்‌சன்ஸ் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி முண்ணனி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ரைட்டர்'. இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

பா. ரஞ்சித்திடம் உதவியாளராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இன்று ரைட்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Next Story