சினிமா செய்திகள்

விவாகரத்து பிரிவால் நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்- நடிகை சமந்தா உருக்கம் + "||" + Thought I would die Samantha Ruth Prabhu on separation from Naga Chaitanya

விவாகரத்து பிரிவால் நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்- நடிகை சமந்தா உருக்கம்

விவாகரத்து பிரிவால் நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்- நடிகை சமந்தா உருக்கம்
நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தெரிவித்தார்.
ஐதராபாத் ,

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். 

இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஐதராபாத்தில் வசித்து வந்தார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து 'சமந்தா அக்கினேனி'என்று மாற்றிக் கொண்டார். 

இந்நிலையில் நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தெரிவித்தார்.

 இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானும், நாக சைதன்யாவும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். நண்பர்களும் நலம் விரும்பிகளும் இந்த கடினமான காலகட்டத்தில் எங்களை ஆதரியுங்கள். எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து இதனை எளிதாக கடந்துபோக எங்களுக்கு உதவுங்கள்” என்று நடிகை சமந்தா தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில்  பிலிம்ஃபேருக்கு  பேட்டி  அளித்த சமந்தா, "உங்களுக்கு ஒரு மோசமான நாள் என்றால் அதை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள் , அதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டுவிட்டாலே உங்கள் வேலை எளிதாகிவிடும். 

ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள்  என்று நினைத்தேன். விவாகரத்து  பிரிவால், நான் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். நான் இவ்வளவு வலிமையானவளாக  இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை . இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையுடையவள் என்பது இதற்கு முன் எனக்கு தெரியாது.

எளிமையான தொடக்கத்தில் இருந்து வந்த நான் , எனது முதல் படத்திலேயே உடனடியாக வெற்றியைக் கண்டேன். அதனால் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக அனைவரும் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.பார்வையாளர்களிடமிருந்து நான் பெறும் அனைத்து அன்பிற்கும் நான் தகுதியானவள் அல்ல என்பது என்னை மேலும் நொறுங்க செய்கிறது.இப்பொது  நான் அதை எதிர்த்து போராடுவதை நிறுத்திவிட்டேன் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து: வதந்திகள் குறித்து நாகார்ஜூனா விளக்கம்
சமந்தா-நாகசைதன்யா விவாகரத்து குறித்து வதந்திகளை வெளியிட வேண்டாம் என்று நாகார்ஜூனா கேட்டுக் கொண்டுள்ளார்.
2. நாகசைதன்யாவுடன் மீண்டும் இணைவாரா...? விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா..!
நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்ட விவாகரத்து குறித்த பதிவை நீக்கியுள்ளார்.
3. சமந்தாவை பிரிந்தது தொடர்பாக முதல்முறையாக மவுனம் கலைத்தார் நாக சைதன்யா
இது குறித்து வெளியாகி உள்ள வீடியோவில் அவள் சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் என்று நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
4. சமந்தாவை பிரியும் முடிவு ...! இருவரின் நலன் கருதியே...!- நாக சைதன்யா
சமந்தாவை பிரியும் முடிவு பரஸ்பர நலன் கருதியே எடுக்கப்பட்ட முடிவு என நடிகர் நாக சைதன்யா கூறினார்
5. 5 மொழிகளில் வெளியாகும் சமந்தாவின் ‘யசோதா’ - முதற்கட்ட படிப்பிடிப்பு நிறைவு
‘யசோதா’ திரைப்படத்தை 5 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.