திருநங்கையை தத்தெடுத்த நமீதா மாரிமுத்து- வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து பங்குபெற்றார்.
சென்னை ,
பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து பங்குபெற்றார் . தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியின் ஆரம்ப வாரத்திலே அவர் வெளியேற்றப்பட்டார்.
அவர் வீட்டை விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தாமரையுடனான பிரச்சனையால் அவர் வெளியேறியதாக முதலில் கூறப்பட்டது பின்னர் நமீதாவுக்கு கொரோனா தொற்று பாதித்ததால் வெளியேறினார் என தகவல் வெளியானது .இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நமீதா, தான் உண்ணாவிரதத்தின் போது வீட்டில் மயங்கி விழுந்ததால் வெளியேறியதாகக் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு, நமீதாவின் வளர்ப்பு தாயார், திருநங்கை நமீதா மாரிமுத்துவை தத்தெடுத்து தனது சொந்தப் பெண்ணாக வளர்த்தது குறித்து மனம் திறந்து பேசினார். மேலும் , நமீதா தற்போது பிரவீணா மாயா என்ற திருநங்கையை தனது மகளாக தத்தெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நமீதா மாரிமுத்து - அவரது மகள் பிரவீணா மாயா ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story