வெள்ளித்திரை, சின்னத்திரை பின்னணி குரல் கலைஞர்கள் சங்க பேரவை கூட்டம்
வெள்ளித்திரை, சின்னத்திரை பின்னணி குரல் கலைஞர்கள் சங்க பேரவை கூட்டத்தில் எஸ்.வி.சேகர் பங்கேற்றார்.
தமிழ்நாடு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 7-ம் ஆண்டு பேரவை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் திருத்தப்பட்ட சங்க விதிகள் புத்தகத்தை சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.வி.சேகர் வெளியிட சவுகீத் டப்பிங் ஸ்டூடியோ டி.ஏ.குமார் பெற்றுக்கொண்டார்.
இந்த கூட்டத்தின் சிறப்பு அம்சமாக, தமிழ்த்திரை உலக சங்கங்களின் வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண்களின் பணியிட பாதுகாப்புக்கான ஐசிசி கமிட்டி, உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்த விஷாகா வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐசிசி கமிட்டி உறுப்பினர்களாக சின்மயி ஸ்ரீபாதா, டாக்டர் மகேஸ்வரி, வக்கீல்கள் சித்ரா, மீனாட்சி முருகன், முரளிகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் நிறுவன தலைவர் எஸ்.வி.சேகர், சங்க தலைவர் முரளிகுமார் ஆகியோர் பேசும்போது, 300-க்கு அதிகமாக உறுப்பினர்களை சங்கத்தில் இணைக்கும் திட்டம் இல்லை எனவும், தகுதிவாய்ந்த, திறமைசாலிகளான பின்னணி குரல் கலைஞர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டு இந்த சங்கம் செயல்படும் எனவும் அறிவித்தனர்.
உறுப்பினர்களுக்கான விபத்து காப்பீடு, இலவச மருத்துவ திட்டம், இறப்பு நிதி முதலிய இன்னும் பல நலத்திட்டங்களும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. சங்க பொதுச்செயலாளர் தாசரதி, ஆலோசகர் தம்பி பார்த்தசாரதி, உபதலைவர் மயிலைகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story