சினிமா செய்திகள்

மற்ற படங்களை விமர்சிக்க ப்ளூசட்டை மாறன் தகுதியான நபர் : இயக்குநர் பாரதிராஜா + "||" + He deserves to criticize other films: Director Bharathiraja on Maaran

மற்ற படங்களை விமர்சிக்க ப்ளூசட்டை மாறன் தகுதியான நபர் : இயக்குநர் பாரதிராஜா

மற்ற படங்களை விமர்சிக்க ப்ளூசட்டை மாறன் தகுதியான நபர் : இயக்குநர் பாரதிராஜா
"தமிழ் டாக்கிஸ் " என்ற சேனல் மூலம் பிரபலமான இவர் தற்போது ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் மூலமாக இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
சென்னை ,

ரஜினி, கமல், விஜய், அஜித் என திரையுலகில் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு கூட பாகுபாடு பார்க்காமல் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர் ப்ளு சட்டை மாறன். சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூபில் "தமிழ் டாக்கிஸ் "  என்ற சேனல் மூலம் விமர்சனம் செய்து பிரபலமான இவர் தற்போது ‘ஆன்டி இந்தியன்’ படத்தின் மூலமாக இயக்குனராக  களமிறங்கியுள்ளார்.

திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன் யூடியூபில்  தமிழ் டாக்கிஸ் எனும் சேனல் வைத்து திரைப்படங்களுக்கு விமர்சனம் கொடுத்து வந்தார். குறிப்பாக விமர்சகர் ஆவதற்கு முன் தயாரிப்பு நிர்வாவாகியாக பணியாற்றி வந்தார். இதனால் சினிமாவில் கிடைத்த அனுபவித்தினால் திரைப்பட விமர்சகராக யூடிப்பில் தனது பணிகளை துவங்கினார் மாறன். பொதுவாக அனைத்து படங்களுக்கும் எதிர்மறை விமர்சனம் அளித்து ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளவார்.

இந்நிலையில் இயக்குனராக களமிறங்கியுள்ள மாறனின் 'ஆன்டி இந்தியன் ' டிசம்பர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. அதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் படத்தைப் பார்த்தனர்.

படத்தை பார்த்த பிறகு பேசிய இயக்குநர் பாரதிராஜா, " எடுக்கின்ற படங்களை எல்லாம் இந்த ப்ளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறாரே. இவர் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன். படத்தையும் எடுத்து விட்டார். நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன்

ஏதாவது ஒரு இடத்திலாவது அவருக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை நாட்கள் மற்ற படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டார் " என தெரிவித்து உள்ளார்.