ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது..
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்)
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் , ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
GET READY to witness the TRAILER of INDIA’s BIGGEST FILM, in Theatres at 10 AM and on Youtube from 4 PM tomorrow… 💥💥💥💥🤘🏻#RRRTrailer#RRRMovie@ssrajamouli@tarak9999@AlwaysRamCharan@DVVMovies@RRRMoviepic.twitter.com/aymwBjIBYa
— RRR Movie (@RRRMovie) December 8, 2021
Related Tags :
Next Story