துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது..!


துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது..!
x
தினத்தந்தி 9 Dec 2021 12:01 AM IST (Updated: 9 Dec 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஷால் தான் நடித்து இயக்கவிருக்கும் துப்பறிவாளன்-2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, வினய் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷாலும் பிரசன்னாவும் டிடெக்டிவ் அதிகாரியாக நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.

இதன் இரண்டாம் பாகத்தில் விஷால், பிரசன்னாவுடன் ரகுமான், கௌதமி ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதையடுத்து மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக துப்பறிவாளன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

இதனால் மீதிப் படத்தை தானே இயக்க உள்ளதாக நடிகர் விஷால் கடந்தாண்டே அறிவித்தார். ஆனால் வேறு படங்களில் விஷால் நடித்து வந்ததால் துப்பறிவாளன்-2 படம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை ஜனவரி மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 3 மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் விஷால் அறிவித்துள்ளார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். விஷால் இயக்கும் முதல் படம் என்பதால் துப்பறிவாளன்-2 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story