கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்... முதல் இடம்பிடித்த தமிழ் திரைப்படம்...!
இந்த வருடத்தில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா ,
ஒவ்வொரு வருடமும் கூகுள் நிறுவனம் தங்கள் வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் , நபர்கள் மற்றும் படங்கள் போன்ற பல சுவாரசிய தகவல்களை வெளியிடும். இந்த நிலையில் இந்த வருடத்தில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலின் 10-வது இடத்தில் இந்தி திரைப்படமான புஜ் - தி பிரைட் ஆஃப் இன்டியா இடம்பெற்றுள்ளது 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் பின்னணியில் எடுக்கப்பட்டது இந்த திரைப்படம். அஜய் தேவ்கான், சஞ்சய்தத், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் 2021 ஆகஸ்ட் 13 - ல் இந்த திரைப்படம் வெளியானது.
இந்த பட்டியலின் 9 வது இடத்தில் மலையாள திரைப்படமான த்ரிஷ்யம் 2 இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த இப்படம் இந்த வருடம் பிப்ரவரி 19-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.
இந்த பட்டியலின் 8-வது இடத்தில் ஹாலிவுட் திரைப்படமான காட்ஸில்லா வெர்சஸ் காங் இடம்பெற்றுள்ளது இந்த திரைப்படம் இந்தியாவில் இந்த வருடம் மார்ச் 24-ஆம் தேதி வெளியானது. அப்போது வெளியான இந்திப் படங்களைவிட இந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலின் 7-வது இடத்தில் சூர்யவன்ஷி என்ற இந்தி திரைப்படம் இடம்பெற்றுள்ளது.ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த இந்த படம் நவம்பர் 5-ம் தேதி வெளியானது. இதுவரை இந்தியாவில் 190 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது.
இந்த பட்டியலின் 6-வது இடத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் உள்ளது.முதல் கொரோனா தாக்குதலுக்குப் பின் 2021 பொங்கலை முன்னிட்டு விஜய்யின் மாஸ்டர் வெளியானது. ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகத்தை போக்கி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த பட்டியலின் 5-வது இடத்தில் ஹாலிவுட் திரைப்படமான எட்டர்னல்ஸ் இடம்பெற்றுள்ளது.மார்வெல் ஸ்டுடியோவின் சூப்பர் ஹீரோ திரைப்படமான எட்டர்னல்ஸ் தீபாவளியையொட்டி இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியானது. முதல் வார இறுதியில் இந்தியாவில் 19 கோடிகளை வசூலித்தது. 2021 ஹாலிவுட் பட வசூலில் இதுவே அதிகபட்ச வசூலாகும்.
இந்த பட்டியலின் 4-வது இடத்தில் பெல் பாட்டம் (இந்தி)
இடம்பெற்றுள்ளது.ஓடிடியில் வெளியாவதாக இருந்து கடைசி நேரத்தில் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியானது கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான மாநிலங்கள் திரையரங்குகள் இயங்க தடை விதித்திருந்ததால் மிகக்குறைவான வசூலையே பெற்றது.
இந்த பட்டியலின் 3-வது இடத்தில் ராதே (இந்தி) படம் இடம்பெற்றுள்ளது.சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலின் 2-வது இடத்தில் சேர்ஷா (இந்தி) இடம்பெற்றுள்ளது.கார்கில் போரில் வீர மரணமடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம். விஷ்ணுவர்தன் இயக்கியிருந் இப்படம் ஆகஸ்ட் 12-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.
2021 இல் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் உள்ளது. நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்றது . ஜெய் பீம் என்ற பெயரும், படத்தின் சமூகநீதி கண்ணோட்ட அணுகுமுறையும் ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான படமாக இதனை மாற்றியது.
Related Tags :
Next Story