படமாகும் ரவீந்திரநாத் தாகூர் நாவல் ... முக்கிய பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய்

படமாகும் ரவீந்திரநாத் தாகூர் நாவல் ... முக்கிய பாத்திரத்தில்  ஐஸ்வர்யா ராய்
x
தினத்தந்தி 9 Dec 2021 3:10 PM IST (Updated: 9 Dec 2021 4:02 PM IST)
t-max-icont-min-icon

ஏற்கனவே ரவீந்திரநாத் தாகூர் எழுதி படமாக்கப்பட்ட சோக்கர் பாலி திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை ,

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நாவல்களில் ஒன்று "3 வுமன்". மூன்று பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்த நாவல் தற்போது  இந்தி, ஆங்கில மொழிகளில் படமாக்கப்படவுள்ளது. இந்த திரைப்படத்தை இஷிதா கங்குலி  இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிக்க மூன்று முக்கிய பெண் நட்சத்திர கதாபாத்திரங்கள் தேவை. அதில் ஒருவராக பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகி ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சமீப காலமாக பெண்களை மையப்படுத்திய படங்கள் அதிகளவில் வர ஆரம்பித்துள்ள நிலையில் இசை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள  இந்த நாவலும் தற்போது படமாக்கப்படுகிறது .

ஏற்கனவே ரவீந்திரநாத் தாகூர் எழுதி படமாக்கப்பட்ட சோக்கர் பாலி திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story