வலிமை படத்துக்கு கூடுதல் சிறப்பு காட்சிகள்?
வலிமை படத்துக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஜனவரியில் திரைக்கு வரும் அஜித்குமாரின் வலிமை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே தியேட்டர்களில் அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளதால் இதுவரை ஊசி போடாத ரசிகர்கள் வேக வேகமாக தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கூடுதல் சிறப்பு காட்சிகளை திரையிட்டு முதல் நாளிலேயே கூடுதல் வசூல் பார்க்க வலிமை படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். அதாவது பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீசாகும்போது அதிகாலை 4 மணி முதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் வலிமை படத்துக்கு நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி பெறும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அனுமதி கிடைத்தால் முதல் நாளிலேயே 8 காட்சிகள் வரை திரையிட முடியும் என்றும், இதன்மூலம் வலிமை படத்தின் முதல் நாள் வசூல் சாதனை முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நள்ளிரவு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? என்பது உறுதியாகவில்லை. வலிமை படத்தை வினோத் இயக்கி உள்ளார். நாயகியாக கியூமா குரோஷி, வில்லனாக கார்த்திகேயா மற்றும் சுமித்ரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Related Tags :
Next Story