டைரக்டர் சிவாவின் வீட்டிற்கு திடீர் வருகை தந்த ரஜினிகாந்த்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Dec 2021 12:19 AM IST (Updated: 10 Dec 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

டைரக்டர் சிவாவின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4-ந்தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டைரக்டர் சிவாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு டைரக்டர் சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார். ரஜினியின் திடீர் வருகையால் டைரக்டர் சிவாவின் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர், மேலும் ரஜினிகாந்த், சிவாவின் வீட்டில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் ‘அண்ணாத்த’ திரைப்படம் பற்றி விவாதித்ததாகக் கூறப்படுகிறது.


Next Story