திரிஷா பட சிக்கல் தீர்ந்தது
திரிஷா,அரவிந்தசாமி நடித்த சதுரங்க வேட்டை-2 பட சிக்கல் தீர்ந்தது.
வினோத் இயக்கத்தில் 2014-ல் வெளியான 'சதுரங்க வேட்டை' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது.
இதைத் தொடர்ந்து 'சதுரங்க வேட்டை 2-ம் பாகம் தயாரானது. இதில் அரவிந்தசாமி, திரிஷா, நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிர்மல் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து திரைக்கு வர இருந்த நிலையில் அரவிந்தசாமி தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக பிரச்சினையை கிளப்பினார். விவகாரம் கோர்ட்டுக்கும் சென்றது.
இதனால் சதுரங்க வேட்டை-2 படம் திரைக்கு வராமல் பல வருடங்களாக முடங்கியது. இந்த படத்தை திரைக்கு கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி செய்தும் நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதையடுத்து அடுத்த மாதம் (ஜனவரி) சதுரங்க வேட்டை-2 படம் திரைக்கு வரும் என்றும் படக்குழு அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story