'மாறன்' திரைப்படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கியது
'மாறன்' திரைப்படத்தின் பின்னணி இசை பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
சென்னை ,
நடிகர் தனுஷ் நடிப்பில் டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாறன் .சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மாறன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Maaran update …. BGScore starts today … will be an action packed score …. @dhanushkraja@karthicknaren_M@SathyaJyothi_@MalavikaM_
— G.V.Prakash Kumar (@gvprakash) December 11, 2021
Related Tags :
Next Story