இப்போது வரும் படங்களை பார்க்கும்போது ‘பொதுநல வழக்கு போடும் எண்ணம் வருகிறது’: பாக்யராஜ்


இப்போது வரும் படங்களை பார்க்கும்போது ‘பொதுநல வழக்கு போடும் எண்ணம் வருகிறது’: பாக்யராஜ்
x
தினத்தந்தி 12 Dec 2021 2:21 PM IST (Updated: 12 Dec 2021 2:21 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெற்ற ‘கடைசி காதல் கதை’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், டைரக்டர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது:-

‘‘ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துபோன முப்படை தளபதி, அவரின் மனைவி மற்றும் 11 பேர்களுக்காக வருந்துகிறேன்.

கொரோனாவுக்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ஆனால், சமீபத்தில் வெளிவந்த சில படங்களை பார்த்தபோது, தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது வருத்தம் அளிக்கிறது. பொதுநல வழக்கு போடும் அளவுக்கு மன உளைச்சலாக இருக்கிறது.’’

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.


Next Story