மாதம் ரூ.10 லட்சம் வாடகையில் சக நடிகரின் வீட்டிற்கு குடியேறும் பிரபல நடிகை...!
முன்பதிவு தொகையாக ரூ.60 லட்சமும் மாத வாடகையாக ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
மும்பை ,
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர் அமிதாப் பச்சன். இவருக்கு மும்பையின் பல்வேறு பகுதிகளில் சொந்த பங்களாக்கள் உள்ளன.இவர் மும்பையின் ஜூஹுவில் உள்ள தனது இடத்தை 15 வருட ஒப்பந்தத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி இவருக்கு அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28 வது மாடியில் டூப்ளக்ஸ் வீடு அவருக்கு இருக்கிறது. தற்போது இந்த வீட்டை அவர் பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனானுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
அமிதாப் பச்சன் வீட்டில் வாடகைக்கு இருக்க, கீர்த்தி சனான் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். முன்பதிவு தொகையாக ரூ.60 லட்சமும் மாத வாடகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
நடிகை கீர்த்தி சனான் இந்தியில் தில்வாலே, க்ளாங்க், பரேலி கி பார்ஃபி, ஹவுஸ்புல் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நேனொக்கடே என்ற படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த " மிமி " இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிகொடுத்தது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற " பரமசுந்தரி " பாடல் நாடு முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story