உண்மை சம்பவ படத்தில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகன்
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படத்தில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இசையமைப்பாளராக அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்தவர், ஜீ.வி.பிரகாஷ். இவர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு ‘ரிபெல்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கே.ஞானவேல் ராஜா, சி.வி.குமார் தயாரிப்பில், அறிமுக டைரக்டர் நிகேஷ் இயக்குகிறார்.
“மூணாறு பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம், இது. ‘ஜெய் பீம்’, ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களைப் போல் இந்தப் படமும் பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார், டைரக்டர் நிகேஷ்.
“இந்தப் படம் ஒரு ஊரின் வரலாறை பேசுவதாக சொன்னார்கள். மூணாறின் அரசியல் எனக்குத் தெரியும். அந்த அரசியலை இந்தப் படம் பேசுவதில், மகிழ்ச்சி. இது ஒரு சிறப்பான படைப்பாக இருக்கும் என நம்பு கிறேன்” என்று டைரக்டர் பா.ரஞ்சித் கூறினார்.
Related Tags :
Next Story