நடிகர் ரஜினிக்கு வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து


நடிகர் ரஜினிக்கு  வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Dec 2021 3:30 PM GMT (Updated: 2021-12-12T21:00:07+05:30)

கவிஞர் வைரமுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 72 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி வீடு முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் மம்முட்டி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் திரையுலகினர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .அதில்  நடிகர் ரஜினிகாந்த்திற்கு தொலைபேசியில் வாழ்த்து சொன்னேன் என்றும் ,ரஜினிகாந்தின் வாழ்வில் இனி அரசியல் பணி  இல்லை ஆனால் அறப்பணி இல்லாமல் இல்லை ,அவர் பேருக்குள்  மட்டுமா  சிரிப்பிலும் இருக்கிறது காந்தம் என்று வாழ்த்தியுள்ளார் .

Next Story